சுவையான 'வெண்டைக்காய் கேரட் தோசை' ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!  - Seithipunal
Seithipunal


வித்தியாசமான சுவையில் வெண்டைக்காய் கேரட் தோசை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
புழுங்கல் அரிசி 
காய்ந்த மிளகாய் 
பெரிய வெங்காயம் 
கேரட் 
வெண்டைக்காய் 
கடுகு 
சீரகம், உப்பு 
எண்ணெய் 
கொத்தமல்லி 

செய்முறை: 
முதலில் கேரட்டை சுத்தம் செய்து துருவி வைத்துக் கொள்ளவும். வெண்டைக்காய், வெங்காயம், கொத்தமல்லி மூன்றையும் பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

புழுங்கல் அரிசியை கழுவி ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்து பிறகு காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

பின்னர் வெண்டைக்காய் சேர்த்து நன்றாக அரைத்து புளிக்க விடவும். மாவு புளித்ததும் தோசை கல்லில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி துருவிய கேரட்டை தோசை மீது தூவி இருபுறமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் கேரட் தோசை தயார் .


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ladies finger carrot dosa tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->