சுவையான முட்டைக்கோஸ் ப்ரை செய்வது எப்படி? - Seithipunal
Seithipunal


காய்கறி வகைகளில் ஒன்றான முட்டைகோஸ் சாப்பிடுவதால் கண்பார்வை, முடக்கு வாதம் போன்ற பிரச்சனைகள் குணமாகும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக முட்டைகோஸை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இப்படி மருத்துவகுணம் நிறைந்த முட்டைகோஸை எப்படி ப்ரை செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

முட்டைக்கோஸ்
உப்பு 
மிளகு தூள்
மஞ்சள் தூள்
சீரக தூள் 
காஷ்மீரி மிளகாய் தூள்
இஞ்சி பூண்டு விழுது 
அரிசி மாவு 
சோள மாவு 
கடலை மாவு
முந்திரி பருப்பு
பச்சை மிளகாய்
எண்ணெய்

செய்முறை:-

முட்டை கோஸை நீள வாக்கில் மெல்லிசாக நறுக்கி, அதனுடன் உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து நன்கு கிளற வேண்டும்.

ஒரு கடாயில் பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி, சூடானதும் முந்திரி பருப்பை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் கலந்து வைத்துள்ள கோஸ் கலவையை எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

இதைத் தொடர்ந்து கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதையடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் முந்திரி பருப்பு, கோஸ், பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து விடவேண்டும். அவ்வளவுதான் முட்டைகோஸ் ப்ரை தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to muttaikos fry


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->