இந்தியா முழுவதும் மலிவு விலையில் பெட்ரோல்.. மத்திய அமைச்சர் தகவல்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 2021 நவ.3ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85, டீசல் ரூ.102.59 ரூபாய் விற்பனையானது. இதுவே, பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. பிறகு 5 மாநிலங்களின் சட்டசபை பொது தேர்தலால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் 265வது நாளாக இன்று (பிப்.10) ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன.

இந்த நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை விரைவில் குறையும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். உலகில் எந்த நாட்டில் மலிவு விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கிறதோ அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக கூடிய விரைவில் மலிவு விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Minister said Petrol price will be reduce all over India


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->