மக்களவைத் தேர்தலில் இருந்து விலகும் பாஜக வேட்பாளர்கள் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


நாட்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் மே 7-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் குஜராத்தைச் சேர்ந்த 2 பா.ஜ.க. வேட்பாளர்கள் மக்களவை தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அதாவது, தற்போது எம்.பி.யாக பதவி வகித்து வரும் ரஞ்சன் பட், பா.ஜ.க. சார்பில் வதோதரா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரை வேட்பாளராக நிறுத்தியதற்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், ரஞ்சன் பட்டை பா.ஜ.க. வேட்பாளராக அறிவித்ததை கண்டிக்கும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஞ்சன் பட் இன்று தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சில தனிப்பட்ட காரணங்களுக்காக மக்களவை தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்துள்ளார்.

இதே போல், சர்பகந்தா மக்களவை தொகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளராக பிகாஜி தாக்கூர் என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தனிப்பட்ட காரணங்களுக்காக மக்களவை தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஒரே மாநிலத்தில் இரண்டு பாஜக கேட்பார்கள் விலகுவதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two bjp candidates withdraw of election in gujarat


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->