சோகம் - குஜராத்தில் 20 பேரின் உயிரை பறித்த மின்னல்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பருவம் தவறிய மழை பெய்து வந்த நிலையில், திங்கட்கிழமையுடன் மழை சற்றே குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தத் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் இதுவரை இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், ”மோசமான வானிலை காரணமாக மின்னல் தாக்கியதில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதை அறிந்து மிகவும் வருத்தம் அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படுகாயம் அடைந்தவர்களை மீட்பதற்காக உள்ளூர் நிர்வாகம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார். மாநிலத்தில் மழை மேலும் சில நாட்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பொதுமக்கள் மழைக்காலங்களின் போது வெட்டவெளிகள், மரங்களுக்கு கீழ் உள்ளிட்ட இடங்களில் நிற்க வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

இதற்கிடையே தொடர் மழையால் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் உரிய இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty peoples died in gujarat for lightning attack


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->