சற்றுமுன்: கோட்டை விட்ட இந்தியா.. தீவிரவாதிகள் அரங்கேற்றி வரும் நாசகரம்..? பதற்ற நிலையில் வடமாநிலங்கள்..!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவிற்குள் 400 தீவிரவாதிகளுக்கு மேல் ஊடுருவ கூடும் என்று அமெரிக்கா விடுத்திருந்த எச்சரிக்கையை கவனிக்காததின் விளைவு இன்று ஜம்மு காஷ்மீரின் மலங்புராவில் விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

நாள் தோறும் துப்பாக்கி சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பது ஜம்மு காஷ்மீர்  பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது.

என்றாவது ஒரு நாள் தாக்குதல் நடக்காமல் இருந்தால் தான் அது அதிசயம். தினம் தினம் ஏதாவது ஒருவகையில் தாக்குதல் நடப்பதும், அதனை இந்திய ராணுவம் முறியடிப்பதும் தொடர்கதையாகிவருகிறது.

கடந்த சனிக்கிழமை தான் காஷ்மீரில் மக்கள் வாழும்  குடியிருப்புப் பகுதிகளில் தீவிரவாதிகள் நுழைந்து  அங்கிருந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்

இந்திய இராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த  இந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இருந்தாலும் அதைவிட இந்திய ராணுவ தரப்பில் அதிகாரிகளோடு சேர்த்து ராணுவத்தினர் ஆறுபேரும் பொதுமக்கள் தரப்பில் ஒருவரும் உயிரிழந்தனர்.

இப்படி தினம் தினம் ஒரு உயிரையாவது இழக்கும் நிலையில் தான், இந்தியாவின் எல்லை பாதுகாப்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் மலங்புராவில் உள்ள விமானப் படை தளம் மீது தீவிரவாதிகள் இன்று திடீர் தாக்குதலில் ஈடுபட்டது வடஇந்தியா முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrorists-fire-upon-guards-at-Air-Force-station


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->