மருத்துவமனைக்கு விரைந்த தமிழிசை.. குமரி ஆனந்தனுக்கு என்ன ஆச்சு..? மருத்துவர்கள் சொன்ன ஆறுதல் செய்தி..!! - Seithipunal
Seithipunal


முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிறந்த பேச்சாளர், காந்தி பேரவையின் தலைவர், நாடார் சமூகத்தின் மூத்த தலைவர், என்றெல்லாம் அழைக்கப்படுபவர் தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை குமரி அனந்தன். 

காங்கிரஸ் பாரம்பரியத்தில் மூத்த தலைவராக விளங்கி வரும் குமரி ஆனந்தன் குடும்பத்திலிருந்து தமிழிசை சௌந்தரராஜன் தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக இருந்து தற்பொழுது இரு மாநிலங்களுக்கு ஆளுநராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் தந்தை குமரி ஆனந்தன் உடல்நிலை குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு.குமரி ஆனந்தன் அவர்களை அவரது மகளும் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார். மருத்துவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் முழுவதும் குணமடைந்து விடுவார்கள் விரைவில் வீடு திரும்பலாம் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilisai inquired her father kumari anandan heath issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->