நடந்து செல்லும் அளவுக்கே தண்ணீர் இருக்கும் குட்டையில் மூழ்கி, 5 பேரும் எப்படி இறந்திருக்க முடியும்? - Seithipunal
Seithipunal


நடந்து செல்லும் அளவுக்கே தண்ணீர் இருக்கும் குட்டையில் மூழ்கி, 5 பேரும் எப்படி இறந்திருக்க முடியும்? - மனித உரிமை ஆர்வலர்கள்

5 பேரையும் அடித்துக் கொன்று கடப்பா அருகே உள்ள குட்டையில் வீசியிருக்கலாம்  என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு..

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒண்டிமிட்டா என்ற இடம் திருப்பதி மலைப்பகுதியையொட்டி மிக அருகாமையில் அமைந்துள்ளது ..இங்குள்ள ஏரி ஒன்றில், கொத்துகொத்தாக பிணங்கள் மிதப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்தனர். அதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல்கொடுத்துள்ளனர்

அந்தப் பகுதியில் செம்மரங்கள் அதிகமாக உள்ளதால், அவர்கள் செம்மரம் வெட்ட வந்த தமிழகக் கூலித் தொழிலாளர்களா என்ற கோணத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த துவங்கியுள்ளனர் ..ஆனால் செம்மரம் வெட்டப்படுவதை ஒழிக்க, அந்தப் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்துப்பணியில் இறங்கியுள்ளனர்..

அவர்கள் தமிழர்கள் என அறியப்பட்ட நிலையில், 5 தமிழர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 3 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்த முதல்வரின்  அறிவிப்பில்,

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது , இந்த செய்தி மிகவும் துயரமானதாகும்..



உயிரிழந்தவர்களின் சடலங்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்லவும், விசாரணை நடத்தவும் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். 

இறந்தவர்களின் உடலை அடையாளம் கண்டு உடற்கூறாய்வு செய்ய தமிழ்நாட்டில் இருந்து  ஒரு குழு கடப்பாவுக்கு செல்ல உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்..

தற்போது மனித உரிமை ஆர்வலர்கள் இது குறித்து கேள்விகள் பல எழுப்பியுள்ளனர்,

நடந்து செல்லும் அளவுக்கே தண்ணீர் இருக்கும் குட்டையில் மூழ்கி, 5 பேரும் எப்படி இறந்திருக்க முடியும்?

5 பேரையும் அடித்துக் கொன்று கடப்பா அருகே உள்ள குட்டையில் வீசியிருக்கலாம்  என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

 

.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil people dead bodies floating in andira lake


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->