உண்மையை கூறினால் தண்டனை.,சுதந்திரம் இல்லாத இந்தியா..!அமெரிக்க அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஊடகங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படுவதில்லை மேலும்  அரசை விமர்சிக்கும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு  அச்சுறுத்தப்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

 அமெரிக்க நாடாளுமன்றத்தில் மனித உரிமை மீறல் தொடர்பான ஆய்வறிக்கையில் சில காலங்களாக அரசை விமர்சித்து செய்திகள் வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் ,ஊடகங்கள் மிரட்டப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

                                           punishment to media க்கான பட முடிவு

அதுமட்டுமின்றி கடந்த 5  ஆண்டுகளாக ,அரசை விமர்சித்த 3 செய்தி தொலைக்காட்சிகளும், 45 வலைதளங்களும் முடக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் 54 பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் 45 பேர் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

 இந்நிலையில் NDTV அலுவலகத்தில் திடீர் CBI சோதனை, கந்துவட்டிகொடுமை குறித்து உணர்த்திய கார்டூனிஸ்ட் பாலா கைது ஆகியவற்றை  இந்தியாவில் ஊடகங்களுக்கு சுதந்திரம் இல்லை என்பற்கு உதாரணங்களாக அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

say the truth will get punishment, the US declaration ..!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->