இந்தியா-நார்வே இடையேயான உறவு மேலும் வலுப்படுத்தப்படுகிறது.! பிரதமர் மோடி - Seithipunal
Seithipunal


கடந்த மே மாதம் நார்வே, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றிருந்தார். அதன் பின்னர் இந்தியா மற்றும் நார்வே நாடுகளுக்கு இடையே பருவநிலை மாறுபாடு, வர்த்தகம், முதலீடுகள் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நார்வே பிரதமா் ஜோனஸ் கார் ஸ்டோரும், இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியும் தொலைபேசி மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு காலநிலை நிதியை திரட்டுவதற்கும், வளரும் நாடுகளுக்கு சமமான, சரியான நேரத்தில் மற்றும் போதுமான காலநிலை நிதியை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பசுமை ஹைட்ரஜன், கப்பல் போக்குவரத்து, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் நார்வேயின் ஒத்துழைப்பு அதிகரித்து வருவது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது என்று மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi said The relationship between India and Norway is being strengthened


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->