பாகிஸ்தானில் பரபரப்பு... தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் குண்டுவெடிப்பு! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் இந்த மாதம் 8 ஆம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி மாநகரில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வளாகப் பகுதியில் இன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 

தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்கள் உள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெடிகுண்டை நெகிழி பையில் மர்ம நபர்கள் மறைத்து தேர்தல் ஆணைய அலுவலகத்தினுள் வைத்து விட்டு சென்றிருந்த நிலையில் துப்புரவு பணியாளர் ஒருவர் அந்தப் பையை எடுத்து குப்பை தொட்டியில் வீசி உள்ளார். 

இந்நிலையில் நெகிழி பையில் இருந்த வெடிகுண்டு இன்று காலை திடீரென பயங்கர சாத்தத்துடன் வெடித்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். 

மேலும் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Election Commission office bomb blast


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->