#Breaking :: கல்விக்கடன் ரத்து செய்யப்படுமா..? பொய் என்ற வார்த்தை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாது..!! மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்..!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இன்று கேள்வி நேரத்தின் பொழுது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் மாணவர்கள் உயர்கல்விக்காக பெற்ற கல்விக்கடன் ரத்து செய்வது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதுகுறித்து பேசிய சுப்பராயன் "மத்திய அரசு பெரும் நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கடன்களை ரத்து செய்துள்ளது. ஆனால் 0.82% மட்டுமே இருக்கக்கூடிய உயர் கல்விக்காக மாணவர்கள் பெற்ற கடனை ஏன் ரத்து செய்யக்கூடாது? உயர்கல்வி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யுமா?" என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் "பெரும் நிறுவனங்கள் கடனை மத்திய அரசு ரத்து செய்யவில்லை" என பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொய்..!! பொய்..!!! என கூச்சலிட தொடங்கினர். அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பொய் என்ற வார்த்தை பயன்படுத்தக் கூடாது. அதன் நீக்க வேண்டும் என சபாநாயகர் இடம் கோரினார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர் "மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை ஏதோ ஒரு பெரும் நிறுவனங்களுக்கு அரசு வழங்குவது போல் உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் பேசுகின்றனர். இது முற்றிலும் தவறான செயல். பெரும் நிறுவனங்களிடமிருந்து இப்போதும் பணம் வசூலிக்கப்பட்டு அதை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. எனவே உயர் கல்விக்காக மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் ரத்து செய்யப்படாது" என பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nirmala said that student loans for higher education will not be cancelled


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->