மிரள வைக்கும் மாரடைப்பு - ஒன்பதாம் வகுப்பு மாணவி பலி.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலி நகரில், சாக்ஷி ரஜோசரா என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு அறைக்குள் நுழையும் போது திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.                                                                                                                                                                                               அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி மாரடைப்பால் மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழப்புக்கு காரணம் அறிய, அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. 

இருப்பினும், மாணவிக்கு தேர்வு அறைக்குள் நுழையும் போது மாரடைப்பு நேரிட்டதால், பள்ளி செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர்கள் தந்த அழுத்தங்கள் எதுவும் அவரது உடல்நலத்தை பாதிக்கும் வகையில் இருந்ததா? என்பது குறித்தும் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே குஜராத் மாநிலத்தில் இளம் வயதினர் மாரடைப்பால் மரணமடைந்து வருவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், ஒன்பதாம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணமடைந்திருப்பது மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nineth class student died due to heart attack in gujarat


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->