#BREAKING சற்றுமுன்: 7.80 இலட்சம் இந்திய துணை இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய உள்துறை அமைச்சகம்.!!  - Seithipunal
Seithipunal


கடந்த 14-ந்தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 2,500 சி.ஆர்.பி.எப் வீரர்கள் 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்த போது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி பலியானார்கள். 

இந்த சம்பவம் உலக நாட்டு மக்களையே அதிர வைத்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. இந்திய அரசு, இந்த தாக்குதலை பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தான் நடத்தியது என்று அறிவித்தது.

மேலும் பாகிஸ்தான் அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது மட்டுமில்லாமல், இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், நாட்டின் பாதிப்பு அம்சங்களை சுய பரிசோதனை செய்து வருகிறது. 

மேலும், காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள். இராணுவத்திற்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதற்கிடையே, புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்திய துணை இராணுவ வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 

* காஷ்மீரில் பணிபுரியும் துணை ராணுவ படை வீரர்களை டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு விமானத்தில் அழைத்து செல்ல அனுமதி.

* இந்திய துணை இராணுவ வீரர்கள் வேலையில் இருக்கும் போதும், விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பும் போதும் இது பொருந்தும்.

* இதன் மூலம் 7.8 லட்சம் துணை ராணுவப்படை வீரர்கள் பயன் பெறுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEW OFFER FOR INDIA


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->