தாத்தாவின் கனவை நிறைவேற்றிய பேரன்கள்.! ஊரையே அண்ணார்ந்து பார்க்க வைத்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


நாட்டில் அனைத்தும் நவீனமாக்கப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில் வடமாநிலங்களில் மட்டும் திருமணவிழாவின் போது மணமக்களை ஊர்வலம் அழைத்து செல்வதற்கு பாரம்பரிய முறைப்படி குதிரை வண்டி, சாரட் உள்ளிட்ட வண்டிகளை பயன்படுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நகரில் குரானா கிராமத்தில் வசித்து வருபவர்கள் ஹேம் மண்ட்லோய் மற்றும் யாஷ் மண்ட்லோய். உறவினர்களான இவர்கள், தங்களது ஜோடிகளை திருமண ஊர்வலத்திற்கு அழைத்து வருவதற்காக ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். 

இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது, "தன்னுடைய பேரன்கள் ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலம் சென்று, மணமகள்களை அழைத்து வரவேண்டும் என்று எங்களுடைய தாத்தா விரும்பினார். அவருடைய கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக எங்களுடைய இதனை செய்துள்ளனர். 

இந்த முறை, தற்போது எங்களுடைய பாரம்பரியத்தில் ஒன்றாக கலந்து விட்டது. இனி எங்களுடைய குழந்தைகளையும் ஹெலிகாப்டரில் தான் திருமண ஊர்வலம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்வோம் என்றுத் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near madhya pradesh grand sons marriage procession in helicopter realize grand father dream


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->