முகநூலில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது.! - Seithipunal
Seithipunal


தற்போது சமூக வலைத்தளங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் சிலர் சமூக வலைத்தளங்களை தவறாகவும், தன்னை மக்கள் முன்பு நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு பயன்படுத்தி வருபவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு ’சமூக ஊடக கண்காணிப்பு செல்’ என்று சைபர் க்ரைம் பிரிவின் கீழ் ஒரு குழு செயல்படுகிறது. இந்தக் குழு தங்களது தொழில் நுட்பத்தின் மூலம் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவர்களை கண்காணித்து வருகிறது. 

அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் சைபர் கிரைம் பார்வையில் முகநூலில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த பதிவு தென்பட்டது. இதையடுத்து சைபர் கிரைம் குழு மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்று விசாரணை செய்தனர். 

அதில், குஜராத் மாநிலத்தில் உள்ள நாடியாத் நகரில் வசித்து வரும், ஷீதல் லோலியானி என்பவர் சிக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் அந்த நபரை விரைந்து சென்று கையும் களவுமாக பிடித்தனர். 

பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், லோலியானி ட்யூசன் ஆசிரியராக பணிபுரிந்து வருவதும், அனைவரையும் கவரும் வகையில் முகநூலில் தீவிரமான கருத்துக்களை பதிவிட்டு வந்ததும் தெரிய வந்தது.

மேலும், போலீசார் லோலியானியின் முகநூல் கணக்கை முடக்கியுள்ளனர். நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு முகநூலில் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kujarath man arrested for kill threat to PM MODI in facebook


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->