கேரளாவில் பயங்கரம் - ரெயில் மோதி தாய், மகன் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே உள்ள மேல்வெட்டு பகுதியை சேர்ந்தவர்கள் மகேஷ் - சரண்யா தம்பதியினர். இவா்களுக்கு ஐந்து வயதில் மிதுன் என்ற ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் சரண்யா நேற்று முன்தினம் மதியம் தனது மகன் மிதுனை தூக்கி கொண்டு அயந்தி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகே நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த கொல்லம்- கன்னியாகுமரி செல்லும் ரெயில் மோதி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்தது தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சரண்யா, மிதுன் உள்ளிட்ட இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், சரண்யாவின் கணவர் மகேஷ் மது போதைக்கு அடிமையானவர் என்பதும், இதனால் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறால் சரண்யா மகனுடன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother and son died in kerala


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->