தலைதூக்கிய சபரிமலை விவகாரம், தலைகீழான கேரள சட்டசபை, எம்எல்ஏ.க்களின் அட்டகாசத்தால் நேர்ந்த பதற்றம்.! - Seithipunal
Seithipunal


சபரிமலை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில் இன்று கேரள சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் போராட்டம் நடத்தி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு  10 முதல் 50 வயது வரை அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர், பக்தர்கள் என பலரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கோவிலுக்கு செல்ல முயன்றபெண்களும் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
 
இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வந்தநிலையில் சபரிமலையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது, மேலும் பல பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். இத்தகைய விவகாரம் தலை தூக்கவே பல்வேறு போராட்டங்கள் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று கேரள சட்டசபை கூடியது.

           

மேலும் சட்டசபை கூடியதும் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் சபரிமலை விவகாரம் தொடர்பாக குரல் எழுப்பி,அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். 

மேலும் அவர்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் பதிலளிக்க முயன்ற போது அதனை ஏற்க மறுத்த எம்எல்ஏ.,க்கள், சபாநாயகர் இருக்கை முன் கூடி பெரும் கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mla make problem in sabarimala issue at kerala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->