மாவோயிஸ்டுகள், பயணிகள் பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல்.! 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கை தீவிரமடைந்திருக்கிறது. எனவே, மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில், தண்டேவாடா மாவட்டம் பச்சேலி அருகே ஒரு வளைவில் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தை மாவோயிஸ்டுகள் இன்று வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். இதில் பேருந்தின் பெரும்பகுதி சேதமடைந்து. அதில் பயணம் செய்த பயணிகள் உடல்கள் சிதைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பொதுமக்கள் மற்றும் ஒரு சிஐஎஸ்எப் வீரர் என 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. பலத்த காயங்களுடன் மேலும் சிலர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

வரும் 12ம் தேதி சத்தீஸ்கரில் முதற்கட்ட தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியிருப்பது பாதுகாப்புக்கு சவால் விடுக்கும் வகையில் இருக்கிறது.

English Summary

Maoists attacked passenger bus

செய்திகள்Seithipunal