டீசல் தட்டுப்பாடு : அரசு பேருந்துகளை இயக்குவதில் சிக்கல்.! - Seithipunal
Seithipunal


கேரள அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சராசரியாக தினசரி ரூ.6.5 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. இதில் டீசல் செலவு ரூ.3.5 கோடியாகும். இதனை போக்குவரத்து கழகம் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கினாலும் கட்டண பாக்கி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. 

கேரள அரசு போக்குவரத்துக் கழகம் தற்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டண பாக்கி ரூ.135 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் டீசல் வழங்குவதை நிறுத்தி விட்டன. இதனால் போக்குவரத்துக் கழகம்  ​​தினமும் பணம் செலுத்தி டீசல் கொள்முதல் செய்து வருகிறது. 

இந்த நிலையில் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் தனது சேவைகளை குறைத்துள்ளது. டீசல் தட்டுப்பாடு காரணமாக நீண்ட தூர சேவைகள் மற்றும் 50 சதவீத சாதாரண சேவைகளை அரசு போக்குவரத்துக் கழகம் குறைத்துள்ளது. மேலும், 10 மாவட்டங்களில் சாதாரண சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயணிகள் தவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து வட்ட கொட்டாரக்கரை பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மழை மற்றும் விடுமுறை காரணமாக போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KERALA GOVT BUS ISSUE FOR Diesel


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->