3 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் - பயணிகளுக்கு மகிழ்ச்சி கொடுத்த இந்திய ரெயில்வே.! - Seithipunal
Seithipunal


கோடை காலத்தில் ரயில் பயணிகளுக்கு, அதிலும் குறிப்பாக முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் சாா்பில் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்தது திட்டத்தின் படி, 200 கிராம் எடையில் எலுமிச்சை, புளியோதரை, தயிா் சாதம் அல்லது கிச்சடி என்று ஏதாவது ஒன்று ‘எகனாமி மீல்ஸ்’ என்ற பெயரில் ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 325 கிராம் எடையில் பூரி மசால் மற்றும் பஜ்ஜி, ‘ஜனதா கானா’ என்ற பெயரில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல், 350 கிராம் எடையில் மசால் தோசை உள்ளிட்ட தென்னிந்திய உணவு வகைகள் ‘ஸ்னாக் மீல்ஸ்’ என்ற பெயரில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 200 மி.லி. தண்ணீா் பாட்டில் வெறும் ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பயணிகள் சிரமம் இல்லாமல் வாங்கும் வகையில் முன்பதிவு செய்யப்படாத பொதுப் பெட்டிகளுக்கு அருகில் நடைமேடையில் இதற்கான கவுன்ட்டா்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian railway sales water bottle three rupees


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->