அமைதியுடன் அதிரடியாக நடந்த "ஆபரேஷன் ஸ்மைல்".! 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுத்த காவல் துறையினர்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசானது குழந்தை தொழிலாளர்களை மீட்பதற்காக "ஆபரேஷன் ஸ்மைல்" என்ற திட்டத்தை செயபலப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக அரசு அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு குழந்தை தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர். 

கடந்த ஜனவரி மாதத்தில் 5 வது கட்டமாக செயல்படுத்தப்பட்டு துவங்கப்பட்ட "ஆபரேஷன் ஸ்மைல்" க்கு என பிரத்தியேக குழுவானது அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலமாக சுமார் 530 காவல் துறையினர்., குழந்தைகள் நல அதிகாரிகள் என்று அனைவரும் இணைந்து இந்த திட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர். 

இந்த திட்டத்திற்கு தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் அந்தந்த மாவட்டங்களை சார்ந்த காப்பகங்கள் மற்றும் என்.ஜி.ஓ நிர்வாகத்தினரும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனைகளில் மொத்தம் 466 சிறுமிகள் மற்றும் 1653 சிறுவர்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட நபர்களில் 274 பெண் குழந்தைகள் அவர்களின் பெட்டோரிடமும்., 1303 சிறுவர்கள் அவர்களது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 816 குழந்தைகளின் பெற்றோர்களை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும்., இந்த குழந்தை தொழிலாளர்கள் அனைவரும் இரயில் மற்றும் பேருந்து நிலையங்கள்., கோவில்கள்., போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் சாலை ஓரங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். 

இந்த தகவலை தெரிவித்த ஐஜி.சுவாதி லக்ரா மீட்கப்பட்ட குழந்தைகளில் 1653 பேர் ஆண் குழந்தைகள் என்றும்., 466 குழந்தைகள் என்றும்., இவர்களில் சுமார் 535 குழந்தைகள் வீதிகளில் இருந்தும்., 340 பேர் தொழிற்சாலைகளில் இருந்தும்., 119 பேர் செங்கல் சூளைகளில் இருந்தும்., 51 பேர் வீதிகளில் பிச்சை எடுக்கும் இடங்களில் இருந்தும் மீட்டெடுக்கப்பட்டுள்ளார். இவர்களை பயன்படுத்திய 58 செங்கல் சூளைகள் மற்றும் தொழிற்சாலைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thelungana state child rescued by operation smile


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->