ராமர் கோயில் கும்பாபிஷேகம்: குஜராத் அதிகாரிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 22ம் தேதி நடைபெற உள்ளதால் குஜராத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 22ஆம் தேதி அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். 

ஊழியர்களின் ஆன்மீக உணர்வு, கோரிக்கை காரணமாக ராமர் கோவில் பிரதிஷ்டை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி அரசு அலுவலகங்களுக்கு மதியம் 2:30 மணி வரை அரை நாள் விடுமுறை விடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. 

இந்த நிகழ்ச்சி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதற்கு முன்னதாக ஜனவரி 27ஆம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் அரை நாள் விடுமுறை என மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Govt Officials half day holiday


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->