காங்கிரசில் இருந்து மற்றுமொரு எம்.எல்.ஏ. ராஜிநாமா!  - Seithipunal
Seithipunal


குஜராத், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் சி.ஜே. சௌதா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

குஜராத், மேசனா மாவட்டத்தில் உள்ள விஜப்பூர் தொகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு சௌதா எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

3 முறை எம்எல்ஏவாக இருந்த இவர் இன்று சட்டப்பேரவை தலைவர் ஷங்கர் சௌந்தரிடம் தனது ராஜினாமா கடிதத்தை இன்று காலை சமர்ப்பித்தார். 

கடந்த 2002 ஆம் ஆண்டு காந்திநகர் தொகுதியில் இவர் முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு காந்திநகர் வடக்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக பணியாற்றினார். 

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் 17 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒருவராக இவர் உள்ளார். இதற்கு முன்னதாக சட்டப்பேரவை உறுப்பினர் சிராக் படேல் ராஜ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து தற்போது இவர் ராஜினாமா செய்துள்ளார்.

இதனால் சட்டப்பேரவையில் உள்ள காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 15 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat congress MLA resigns


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->