குஜராத் | பிறந்து 4 நாள் ஆன குழந்தையின் உடலுறுப்புகள் தானம்!  - Seithipunal
Seithipunal


குஜராத், சூரத் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களை ஆன சிசு மூளைசாவு அடைந்த நிலையில் சிசுவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் பல்வேறு மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் செயல் இழந்த சிகிச்சை பெற்று வரும் பல குழந்தைகளுக்கு மறுவாழ்வு கிடைக்க உள்ளது. 

மிகச் சிறிய உடலில் இருந்த 2 சிறுநீரகங்கள், 2 கருவிழிகள். கல்லீரல், மண்ணீரல் போன்ற முக்கிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. 

இதில் ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 மாத குழந்தைக்கு சிறுநீரகங்களும், புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 10 மாத குழந்தைக்கு கல்லீரலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த குழந்தை கடந்த அக்டோபர் 13ஆம் தேதி சூரத் மருத்துவமனையில் பிறந்தது. முதலில் எந்த அசைவும் காட்டாமல் அழுகையும் இல்லாமல் இருந்தது. இதனால் குழந்தையை சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்றும் குழந்தை மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால் கதறி துடித்த பெற்றோர் குழந்தையின் உடல் உறுப்புகள் மூலம் பல குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கலாம் என்பதை அறிந்து உடல் உறுப்பு தானத்திற்கு ஒப்பு கொண்டனர். 

நாட்டில் மிகச் சிறிய குழந்தை இடம் இருந்து உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டது இதுவே முதல் முறையாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat 4 day baby organs donated


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->