என் சாவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ தான் காரணம் - வாலிபரின் கடிதத்தால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத் மாவட்டம் சோர்வாட் கிராமத்தைச் சேர்ந்தவர் நிதின் பார்மர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். 

அந்தத் தகவலின் படி போலீஸார், விரைந்து வந்து வாலிபரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், போலீசார் அவரது வீட்டைச் சோதனை செய்ததில், கடிதம் ஒன்று சிக்கியது. 

அந்தக் கடிதத்தில், தனது தற்கொலைக்கு மாமியார் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ விமல் சுதாசமா தான் காரணம் என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்எல்ஏவான சுதாசமா மறுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் பேசியதாவது, "இது தற்கொலை அல்ல. கொலை போன்றுத் தெரிகிறது ஆனால், யாரே என்னை அவதூறு செய்ய தற்கொலை போல காட்ட முயற்சிக்கிறார்கள். 

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிதின், கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னிடம் பேசவே இல்லை. அவர் என் அத்தையின் மகன். அவர் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர். அரசியலில் என்னைக் களங்கப்படுத்த யாரோ செய்த சதி இது" என்றுத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குஜராத் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

complaint against bjp mla youth sucide case in gujarat


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->