மூடிய கதவுக்குள் 20 நிமிடத்தில் பிரிவினை மசோதா..? வாயை திறந்த அமித் ஷாவை வெச்சு செய்யும் சந்திரபாபு நாயுடு..!! - Seithipunal
Seithipunal


ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்கியதாக தகவல் வெளியிட்ட  பாஜக தலைவர் அமித் ஷாவை கண்டித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பி உள்ளார்.

பாஜக அரசு மத்தியில் பதவியேற்றதும் மூன்று ஆண்டுகளில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக 1,050 கோடி ரூபாய் ஒதுக்க்கி உள்ளதாகவும்,  ஆனால் ஆந்திர அரசால் 12 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்றும் கூறியிருந்தார் பாஜக தலைவர் அமித் ஷா.

பாஜக தலைவரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு,

அமித் ஷா சொல்வதை பார்த்தால் ஆந்திர அரசிற்கு திறமையில்லை என சொல்ல வருவதை போல உள்ளது.  அவர்கள் என்ன சொன்னாலும்  எங்களது ஆட்சியில் தான்  ஜிடிபி, விவசாயம் வளர்ச்சி பெற்றுள்ளது.

தற்போது பாஜக அரசு  வட கிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு சலுகை வழங்கி வருகிறது. ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்படும் போது, விஞ்ஞான பூர்வமாக மாநிலத்தை பிரிக்கவில்லை.

இதனால் நாங்கள் 10 வருடத்திற்கு வளர்ச்சியில் பின்தங்கி  சென்று விட்டோம். இதற்கு மத்திய அரசு தான் காரணம்.

மூடிய கதவுக்குள் 20 நிமிடத்தில் பிரிவினை மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளித்ததன் மூலம், பிரச்னைக்கு உங்களுக்கும் பங்கு உள்ளது" என்று பாஜகவின் செயல்பாடு குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah's letter false, says TDP's Chandrababu Naidu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->