உயிரிழந்தோரின் மனைவிக்கு இராணுவத்தில் அளிக்கப்பட்ட பணி!!  - Seithipunal
Seithipunal


ஷிஷிர் மால் என்பவர் இரண்டு ஆண்டுகளாக காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுதியில் பாரமுல்லா செக்டரில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2016ல் வீரதீர செயல்களுக்காக ஷிஷிர் மால் சேனா விருது பெற்றுள்ளார்.

இதன்பின்னர், ஷிஷிர் மால் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் கடந்த செப்டம்பரில் நமது தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்தார். தற்போது ராணுவத்தில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரரின் மனைவி சங்கீதா மால்  சேர்க்கப்பட்டுள்ளார்.

மாலை 2013ல் ஷிஷிர் மற்றும் சங்கீதா இருவரும் திருமணம் செய்துகொண்டனர். சங்கீதா தனது கணவர் மறைவின் போது ஒரு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். 

கணவரின் உயிரிழப்பிற்கு பின் தனது ஆசிரியர் பணியை கைவிட்டுள்ளார். பின்னர் அவர், ராணுவத்தில் சேர்வதற்கான ஆலோசனைகளை பெற்று வந்தார். 

பின்னர் நீண்ட நாட்களாக அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார் . அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தற்பொழுது உயரிய ராணுவ துணைத்தளபதி பதவி வழங்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A wife got a Job in military who dead for army


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->