தயவு செய்து இன்று கர்ப்பிணி பெண்கள், இதை செய்ய வேண்டா..!! கறிவேப்பிலை,கீரை பக்கம் போய்டாதீங்க..! - Seithipunal
Seithipunal


சூரியனுக்கும், நிலாவுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழலானது நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த 3 -ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.

7.37 மணி முதல் நிழல் விலக ஆரம்பித்து 8.41 மணிக்கு முழுமையாக விலகிவிடும். இருப்பினும் இரவு 9.38 மணிக்கு பிறகே நிலவு அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும்.

மாலை 5.18க்கு தொடங்கிய சந்திரகிரகணம் கீழ்வானத்தில் நிலா தோன்றும்போதே, முழு சந்திர கிரகணம் பிடிக்க ஆரம்பித்துள்ளது.

 நீல நிலா தினம் என சொல்லப்படும் தினத்தில் இந்த கிரகணம் தோன்றுகிறது. ஒரு மாதத்தில் இரண்டாவது முறை பௌர்ணமி வருவதை புளூ மூன் என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். 

நீல நிலா தினம் என சொல்லப்படும் தினத்தில் சந்திர கிரகணம் நிகழ்வது சற்று அரிதானது. இதற்கு முன்னதாக 1866 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி நீல நிலா தினத்தில் முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது.

அதற்கு பிறகு 151 ஆண்டுகள் கழித்து இன்றைய தினத்தில்தான் இப்படியொரு நிகழ்வு நடைபெறவுள்ளது. இதற்கு பிறகு 2028 டிசம்பர் 31 ஆம் தேதி இதே போன்ற நிகழ்வு நடைபெறும்.

-மனநல பாதிப்பு உள்ளவர்கள், கிரகண வேளையில் வெளியில் செல்வதால் பாதிப்பு அதிகரிக்ககூடும்.

-குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இன்று வெளிய வரக்கூடாது, முடிந்த அளவிற்கு நடப்பதை தவிர்க்கவும்..

-அரிவாள் மனை, கத்தி, இவற்றை கொண்டு  எதையும் நறுக்க கூடாது, கறிவேப்பிலை,கீரை கிள்ள கூடாது..

-ஏனெனில் கிரகணத்தின் போது இப்படி செய்தால் பிறக்கும் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு உடன் பிறக்கும் என முன்னோர்கள் கூறி உள்ளனர்..

-இரவு கர்ப்பிணி பெண்கள் குளித்துவிட்டு விநாயகரை வழிபட வேண்டும்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnant ladies should not do this in eclips


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->