புற்றுநோயை அழிக்க புதிய கண்டுபிடிப்பு.! சத்தீஸ்கர் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அதிகமாக உயிரைக் கொல்லும் நோய்களில், புற்றுநோய் முதலிடம் வகிக்கிறது. ,மேலும் இந்த நோய்க்கான மருந்து இன்னும் சரியான முறையில் இந்தியாவில் கண்டு பிடிக்காமல் இருப்பதே இதற்கு காரணமாகும். அதுமட்டுமல்லாமல் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளும் குறைவாகவே உள்ளன.

இந்த சூழ்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்தவர் மம்தா திரிபாதி. மருத்துவ ஆராய்ச்சியாளரான இவர் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் செல்கள் தொடர்பாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், தனது ஆராய்ச்சியின் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்ட புதிய மூலக்கூறை கண்டுபிடித்துள்ளார்.

மேலும், இந்த கண்டு பிடிப்பு பற்றி மம்தா திரிபாதி கூறுகையில், “புற்றுநோயை குணப்படுத்த உதவும் புதிய மூலக்கூறை கண்டுபிடித்துள்ளேன். இந்த மூலக்கூறு, புற்றுநோய் செல்களை 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை அழிக்கவல்லது. இதனை எலி போன்ற சிறிய உயிரினங்களில் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இந்த ஆராய்ச்சியை செய்து முடிக்க 5 ஆண்டுகள் தேவைப்பட்டது.

இதையடுத்து, இந்த மூலக்கூறு பரிசோதனை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், கீமோதெரபிக்கு மாற்றாக பயன்படுத்த முடியும் என்று உறுதியாக கூற முடியாது. ஆனால், எங்கள் ஆராய்ச்சி சரியான கோணத்தில் நடைபெறுமானால் அது நிச்சயம் சாத்தியம் ஆகலாம். அதேசமயம், இந்த மூலக்கூறு கீமோதெரபியைவிட சிறப்பாக செயல்படும்” என்றார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new molecular discovered to destroy the cancer cells


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->