காச நோய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கி சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் களப்பணியாளர்களை பாராட்டி அமைச்சர் சேகர்பாபு சான்றிதழ்களை வழங்கினார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சர்வதேச காசநோய் தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் காசநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறந்த பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 36 காசநோய் அலகுகளுடன் செயல்பட்டு வருகிறது.  இவற்றில் 161 நுண்ணோக்கி மையங்கள், 13 Gene Xpert கருவிகளான CBNAAT மற்றும் TruNat கருவிகள் உள்ளன.  மேலும், 7 நடமாடும் வாகனங்களும் உள்ளன.
2021ம் ஆண்டு 17,174 நபர்களுக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில் 9,092 நபர்களுக்கு காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் 4,348 நபர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது.  

மாநகராட்சியின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பரிசோதனை வசதி உள்ளது.  
காசநோய் உள்ளவர்களுக்கு 6 மாதம் முதல் 18 மாதம் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இந்தச் சிகிச்சைகளுக்கு தேவையான அனைத்து மருந்து பொருட்களுக்கான செலவுகளை அரசே ஏற்கிறது.

மேலும், காசநோயாளிகளின் சிகிச்சை காலத்தில் மாதந்தோறும் ரூ.500/- உதவித்தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இரண்டு வாரம் தொடர்ந்து இருமல், காய்ச்சல் மற்றும் சளியில் இரத்தம் இருந்தால் உடனடியாக காசநோய் பரிசோதனை செய்ய வேண்டும்.  

இந்தக் காசநோயானது குணப்படுத்தக்கூடிய நோயாகும்.  பொதுமக்கள் சரியான நேரத்தில் பரிசோதனை மேற்கொண்டு காசநோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொளளும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

சர்வதேச காசநோய் தினத்தை முன்னிட்டு, தண்டையார்பேட்டை சி.டி.எச். தொற்றுநோய் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை வழங்கி சிறப்பாக பணியாற்றிய அரசு, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் களப்பணியாளர்களை பாராட்டி சான்றிதழ்களை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு இன்று வழங்கினார்.  

முன்னதாக, காசநோய் சிகிச்சையின் போது ஏற்படும் பக்க விளைவுகளுக்கான சிகிச்சை அளிக்க ஏதுவாக தொற்றுநோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 34 படுக்கை வசதிகளுடன் கூடிய பன் மருந்து எதிர்ப்பு காசநோய் (Multi Drug Resistance) வார்டினை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.  

தொடர்ந்து, பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பில் தொற்றுநோய் மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் மையத்தையும் திறந்து வைத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மேயர் திருமதி ஆர்.பிரியா, துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ.ஜான் எபினேசர், துணை ஆணையாளர்  (சுகாதாரம்) டாக்டர் எஸ்.மனிஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister gave certificate to doctors


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->