ஆண்மை குறைவு உள்ளவர்கள் பயம்கொள்ள வேண்டாம்!. இதை சாப்பிடுங்கள் கிடு கிடுவென அதிகரிக்கும்!. - Seithipunal
Seithipunal


இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு குழந்தையின்மை பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் நமது உணவுப் பழக்கவழக்கங்கள் தான் முக்கிய காரணம். 

மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் தான் இருக்கும். எனவே இந்த மாதிரி பிரச்சனை என்றதும் பெண்கள் மட்டும் நல்ல சரியான உணவுகளை உண்டால் மட்டும் போதாது, ஆண்களும் தான் ஒரு சில உணவுகள் மற்றும் செயல்களை மேற்கொள்ள வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் ஆண்களே இந்த பிரச்சனைக்கு பெரும் அவதிப்படுகின்றனர். முக்கிய காரணம் அவர்களின் உணவு பழக்கவழக்கங்கள், ஒரே இடத்தில் இருந்து அமர்ந்து வேலை பார்ப்பது, மது, புகையிலை போன்ற எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன.

  பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை வந்தால், அனைவரும் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை சரிசெய்ய முயல்வார்கள். ஆனால் அவ்வாறு சென்று என்ன தான் சிகிச்சை மேற்கொண்டாலும், ஒரு சில உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் உணவுகள் மூலமும் இந்த பிரச்சனைக்கு  எளிதில் தீர்வு காண முடியும். 

குழந்தை பெற நினைப்பவர்கள். சிகரெட் பிடிப்பவராக மற்றும் மது அருந்துபவராக இருந்தால், உடனே நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் அவையும் குழந்தை பிறப்பிற்கு தடையை ஏற்படுத்தும். 

குழந்தையின்மை பிரச்னை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள்:

                                                          

பூண்டு :
இந்த உணவு ஆண் மற்றும் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின் பி6 இருப்பதால், இது இருபாலரும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கான உணர்வை அதிகரித்து, கருவுறுதலுக்கு வழிவகுக்கும். பொதுவாக இது அனைவருக்குமே சிறந்த உணவு.

                                             

மாதுளை:
இந்த சுவையான சிவப்பு நிற பழத்தை சாப்பிட்டால், ஆண்களின் விந்தணு அதிகரிப்பதோடு, அதன் சக்தியும் அதிகமாக இருக்கும். மாதுளை பழத்தில் அதிக அளவு நார்சத்து உள்ளதால் இந்த பலம் மிக சிறந்ததாகும்.

                       

வாழைப்பழம்:
 வாழைப்பழத்தில் விந்தணுவின் அளவையும், சக்தியையும் அதிகரிக்கும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, இதில் ப்ரோமெலைன் என்னும் நொதிப்பொருள் இருப்பதால், அவை உடலில் உள்ள உறவில் ஈடுபடுவதற்கான உணர்ச்சியை அதிகரிக்கும்.

                                                               

ஆப்பிள்:
 பழங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஆப்பிள் முதன்மையானது. அத்தகைய பழத்தை பெண்களை விட ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரை சாப்பிட்டால், நம்பமுடியாத அளவில் தீர்வு கிடைக்கும்.

                                                                      

முந்திரி:
 முந்திரி பருப்பை நொறுக்கு தீனி போல் எடுத்துக்கொள்ளவேண்டும். முந்திரிப் பருப்பு மிகவும் சுவையுடன் இருக்கும். எனவே இதனை ஆண்கள் மற்றும் பெண்கள் அவ்வப்போது ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், இதில் அதிகமாக இருக்கும் ஜிங்க் சத்து, கருவுறுதல் தன்மையை அதிகரிக்கும் என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man and women have to take food because of childhood problem!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->