17.02.2019 இன்றைய ராசிபலன்!! இன்று உங்களுக்கு என்ன நடக்கும்?! - Seithipunal
Seithipunal


மேஷம்:

புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். செய்தொழில் புரிபவர்கள் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வி பயில்வோரின் அறிவுக்கூர்மை வெளிப்படும்.

ரிஷபம்:

திருமணப்பேச்சு வார்த்தைகள்  கைக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். வியாபாரம் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும்.

மிதுனம்:

மாணவர்கள் கல்வி பயிலும்  விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். போட்டிகளால் இலாபம் அடைவீர்கள். பங்காளிகளுக்கிடையேயான உறவுநிலை மேம்படும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். பணியில் கவனம் வேண்டும். 

கடகம்:

பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் உயரும். எண்ணிய பணியில் காலதாமதம் உண்டாகும்.  பொருளாதார மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களால் அலைச்சல்கள் உண்டாகும்.

சிம்மம்:

பயணங்களில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி  உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான சூழல் அமையும். புதிய நபர்களின் நட்பால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

கன்னி:

உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை  கடைபிடிக்கவும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் சில காலதாமதம் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். சிறுதூர பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஒற்றுமை மேலோங்கும். 

துலாம்:

சாதுர்யமான பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல் அமையும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். ஆடைச்சேர்க்கை உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

விருச்சகம்:

திடீர் யோகத்தால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். பொருட்களை கையாளும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும். தாய்வழி உறவினர்களிடம் சற்று நிதானத்தை கடைபிடிக்கவும்.

தனுசு:

புதிய முயற்சிகளில் சாதகமான நிலை உருவாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். மனைகளால் இலாபம் உண்டாகும். நண்பர்களுடன் பயணங்கள் மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். 

மகரம்:

பூர்வீக சொத்துகளால் சுப விரயம் உண்டாகும். தாயின் உதவியால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். புதிய நபர்களால் தேவையில்லாத சிறு பிரச்சனைகள் ஏற்படும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். சாதுர்யமான பேச்சுகளால் இலாபம் உண்டாகும்.

கும்பம்:

உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் சாதகமான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் மேம்படும். தொழில் சம்பந்தமான வீண் அலைச்சல்கள் உண்டாகும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும்.

மீனம்:

திருமணப்பேச்சு வார்த்தைகளில் சுபமான முடிவுகள் கிடைக்கும். கவலைகள் நீங்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும்.  நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். கலைஞர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17.02.2019 today rasipalan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->