ITI முடித்தவர்களா நீங்கள்... இசிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு.!
ITI graduate Job opportunity
ஹைதராபாத்தில் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண். 09/2024
பணியின் பெயர்: Technician (GR-II)
காலியிடங்கள்:30
1. Electronic Mechanic -7
2. Electrician-6
3. Machinist-7
4. Fitter-10
சம்பளம்: மாதம் ரூ.20,480
வயது வரம்பு: 18 - 27 க்குள்
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்தேர்வு ,நேர்முகத்தேர்வு மற்றும் டிரேடு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது ,ஓபிசி பிரிவினருக்கு ரூ.750
விண்ணப்பிக்கும் முறை: www.ecil.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.04.2024
===============
https://www.maalaimalar.com/news/state/annamalai-says-10-new-trains-to-run-from-coimbatore-to-spiritual-destinations-712906?infinitescroll=1
500 நாளில்... 100 வாக்குறுதிகள் - கோவையில் அண்ணாமலை வாக்குறுதி.!
CoimbatoreAnnamalai promise
தமிழக பா.ஜ.க தலைவரும் கோவை பா.ஜ.க வேட்பாளருமான அண்ணாமலை இன்று கோவை மாவட்டத்திற்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதில், கோவை எப்பொழுதும் பசுமையாக இருக்க மரங்கள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.
கோவைக்கு 100 வாக்குறுதிகள் 500 நாளில் நிறைவேற்றப்படும். சரவணப்பட்டியில் மக்களின் பொழுதுபோக்குக்காக பூங்கா அமைக்கப்படும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
சரவணபட்டியில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம் அமைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படும். கோவையில் IIM கொண்டு வர வலியுறுத்துவோம்.
கோவையில் இருந்து ஆன்மீக தலங்களுக்கு சுமார் 10 புதிய ரயில்கள் இயக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்படும். 250 மக்கள் மருந்தகம், ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
ITI graduate Job opportunity