நேரடியாக பி.எச்.டி படிப்பில் சேர வேண்டுமா? - இதோ முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர பிஎச்.டி. ஆய்வுப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது தேசிய தகுதி தேர்வு (நெட்) மற்றும் மாநில தகுதி தேர்வு (செட்) உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மேலும், 'நெட்' தேர்வு எழுதுவதற்கும் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில், நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு இந்த விதிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு தளர்த்தி உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளதாவது:-

"4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரலாம். 'நெட்' தேர்வு எழுதலாம். ஆனால், 4 ஆண்டு படிப்பில் அவர்கள் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். 'கிரேடு' முறையாக இருந்தால், 75 சதவீத மதிப்பெண்களுக்கு சமமான 'கிரேடு' பெற்றிருக்க வேண்டும்.

4 ஆண்டு பட்டப்படிப்பில் அவர்கள் என்ன பாடம் படித்து இருந்தாலும், பிஎச்.டி. படிப்பில் தங்களுக்கு விருப்பமான பாடத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் (கிரீமி லேயர் அல்லாதவர்கள்), மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினர் ஆகியோருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு உண்டு" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four years ug course completed students joined phd course


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->