#BREAKING ஜல்லிக்கட்டிற்கு தடை!! அரைமணி நேரத்தில் ஆட்சியர் ஆஜராக உத்தரவு!!  - Seithipunal
Seithipunal


தமிழர்களின்  வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அதில் குறிப்பிடத்தக்க வழக்குகளின் விவரங்களும், நீதிபதியின் உத்தரவு படி, 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை, மதுரை ஆட்சியர் தலைமையில் கமிட்டி அமைத்து நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை செய்துள்ளது. 

அனைத்து சமுதாய பொதுமக்கள், இருதரப்பு வழக்கறிஞர்கள் ஆட்சியருடன் இணைந்து சுமூகமான முறையில் ஜல்லிக்கட்டு நடத்த, ஒரு அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்தனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விழாக்குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்க கோரிய வழக்கு வருகிற ஜனவரி 7க்கு ஒத்திவைப்பு வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டுவிழாவில் இருதரப்பினிடையே கருத்து மோதல் இருப்பதால், ஜல்லிக்கட்டு குழுவை நீதிமன்றமே நிர்ணயிக்கும். 

இருதரப்பினரிடையே ஒருமித்த கருத்து இல்லையெனில், அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்படும். மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளர் அரைமணி நேரத்தில் ஆஜராக வேண்டும்' என  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

avaniyapuram jallikattu maybe ban


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->