யுவன் சங்கர் ராஜாவின் மனைவி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து சுமார் 120க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா. 

இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். இதன் காரணமாக இவருக்கும் இவருடைய தந்தை இளையராஜாவிற்கும் இடையே சிறு கருத்து வேறுப்பாடும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய மதத்திற்கு மாறிய யுவன் அதன் பிறகு சஃரூன் நிசார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது இத்தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது.

திருமணம் ஆனதிலிருந்து இதுநாள் வரை பொறுப்பான குடும்பத்தலைவியாக இருந்த யுவனின் மனைவி தற்போது காஸ்டியூம் டிசைனர் என்ற புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். பிக் பாஸ் புகழ் ரைசா கதாநாயகியாக நடித்து வரும் பியார் ப்ரேமம் காதல் என்ற படத்தில் ரைசாவிற்கு காஸ்டியூம் டிசைனராக உள்ளாராம்.

முதன்முறையாக இப்படத்தின் மூலம் காஸ்டியூம் டிசைனராக அறிமுகமாகி இருக்கும் இவர் தொடர்ந்து பல படங்களில் பணியாற்ற நெருங்கிய வட்டாரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

what Yuvan Shankar Raja's wife is doing now ?!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->