அவருக்காக என்ன வேணாலும் செய்யுவன்! அதிதிராவ்!! - Seithipunal
Seithipunal


மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்த அதிதிராவ், 'செக்க சிவந்த வானம்' என்ற படத்தில் தற்போது மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் கணிசமான படங்களில் நடிகை அதிதிராவ் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தீவிர ரசிகையான இவர் சமீபத்தில் அவர் இசையில் வெளிவந்த 'யுவா' ஹிந்தி பட பாடலை பாடிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்ந்தார்.

Image result for அதிதிராவ்

இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கும் பொது, அவருக்கு பிடித்தமான இயக்குனர் பற்றியும், சினிமா வாய்ப்புகள் பற்றியும் மனம் திறந்து பேசினார், அதில்  "நான் சிறுவயதிலேயே மணிரத்னம் தீவிர ரசிகை. அவருடைய 'பம்பாய்' படத்தை பார்த்து மனிஷா கொய்ராலா மாதிரி நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 

Image result for அதிதிராவ்

சினிமா குடும்ப பின்னணியில் உள்ளவர்கள் இருந்தால் அவர்களின் ஆதரவால் எளிதாக நடிகையாக வாய்ப்பு கிடைத்து இருக்கும். என்னை தூக்கி விட உறவினர்கள் யாரும் சினிமாவில் இல்லை. கஷ்டப்பட்டுத்தான் வாய்ப்புகள் தேடினேன். பல போராட்டங்களுக்கு பிறகு, எனக்கு பிடித்த மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் என்னை கீழே குதிக்க சொன்னாலும் யோசிக்காமல் குதிப்பேன். அவர் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கை உள்ளது. நடிகர், நடிகைகளிடம் நுணுக்கமாக வேலை வாங்குவதில் மணிரத்னம் திறமையானவர்.

Image result for அதிதிராவ்

மேலும் தனக்கு வித்தியாசமான கதைகள், புதிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை இருக்கிறது எனவும், இன்னும் எனக்கு திருப்புமுனையான கதாபாத்திரம் அமையவில்லை" என்று அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What will he do for him Atitirav


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->