சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் இணைந்த விஜய் சேதுபதி.. படக்குழு அறிவிப்பு.!
Vijay sethupathi voice in SK in maveeran movie
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் குரலும் இடம்பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சரிதா, யோகி பாபு, இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் குரல் இடம் பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இந்த தகவல் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Vijay sethupathi voice in SK in maveeran movie