விஜய் சேதுபதியின் 50வது திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்.!
Vijay sethupathi 50th film release update
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 50 வது திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ''மகாராஜா'' என பெயரிடப்பட்டுள்ளது.
இதில் அனுராக் காஷ்யப், மம்தா மோகந்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த திரைப்படம் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் ''மகாராஜா'' திரைப்படம் வருகின்ற மே 16ஆம் தேதி வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
English Summary
Vijay sethupathi 50th film release update