தல அஜித், தளபதி விஜய் பற்றி விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்ட கேள்வி! நெற்றியடி பதில்கொடுத்த மக்கள்செல்வன்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் சிறு,சிறு கதாபாத்திரங்களில் நடித்து தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. வித்தியாசமான கதாபாத்திரங்களில் இயல்பாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

விஜய் சேதுபதி எப்பொழுதும் சமூகம் சார்ந்த வி‌ஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுபவர். மேலும் சமீபத்தில் கூட இவர் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரம் குறித்து தனது கருத்தை வெளிப்படையாக கூறினார். இதற்கு ரசிகர்களிடையே ஆதரவு கிடைத்தது, சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் 100 நாட்களை கடந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.          

இந்நிலையில் கடந்தவராம் தனியார் தொலைக்காட்சியில் நம்பிக்கை விருதுகள் 2018 இல் விஜய் சேதுபதிக்கு சாதனை மனிதருக்கான விருது வழங்கப்பட்டது. விஜய் சேதுபதி விருதினை வாங்கும்போது அவரிடம் சில கேள்விகளை கேட்டனர்.  அப்போது ரசிகர்கள் பற்றி தலயா, தளபதியா? என அஜித், விஜய் பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

கேள்வி கேட்டோருக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, இது என்ன கேள்வி? எங்கு பார்த்தாலும், தலயா, தளபதியானு கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். முதலில் அப்படி கேள்வி கேட்பதை நிறுத்துங்கள். அவர்களை அவர் அவர் வாழ்க்கையில் வாழவிடுங்கள். அவர்களுக்கு உள்ள ரசிகர்கள் அவர்களுக்கு இருக்கட்டும் என கூறி, கேள்வி கேட்போரின் வாயை அடைக்கும் வகையில் பதில் கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay sethubathi talk about ajith and vijay


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->