அப்போது தெரியலையா அவர் ஜோசப் விஜய் என்று?..... பாஜகவினரை தலைகுனிய வைத்த ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான மெர்சல் திரைப்படத்தில், மத்திய பா.ஜ.க அரசினால் கொண்டுவரப்பட்டு அவர்களாலேயே பகிரங்கமாக தோல்வியடைந்த நடவடிக்கையென ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜி.எஸ்.டி வரி திட்டத்தினையும், பண மதிப்பிழப்பினையும் விமர்சித்து காட்சிகளானது இடம் பெற்றிருந்தது.

இது குறித்த வசனங்களுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட அந்த காட்சிகளை நீக்குமாறு தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாக படக்குழுவிற்கு அழுத்தம் கொடுப்பதுடன், நடிகர் விஜய் அவர்களை ஜோசப் விஜய் என்று விமர்சித்துள்ளார் பா.ஜ.க கட்சியினை சேர்ந்த எச்.ராஜா.

பொது மக்களை பாதிக்கின்ற அரசின் செயற்பாடுகளை விமர்சிக்கவே கூடாதென்றால் இங்கு நடப்பதுவென்ன சர்வாதிகார ஆட்சியா என்று எளிய மக்கள் கேள்வியெழுப்புவதுடன், கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது நடிகர் விஜய் அவர்களை மோடி நேரில் சந்தித்து ஆதரவு கேட்கும் போது பாஜகவினருக்கு தெரிந்திருக்கவில்லையா அவர் ஜோசப் விஜய் என்று சீறுகின்றனர் விஜய் ரசிகர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Protested on Actor Vijay's Mersal Film, Vijay Fans are angry about BJP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->