வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த கவிஞர் வைரமுத்து.! - Seithipunal
Seithipunal


தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. 

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர். இதில் 76 பேர் பெண்கள், 874 பேர் ஆண்கள். 

இவர்களின் எதிர்காலத்தை 6 கோடியே 23,33,925 வாக்காளர்கள் நிர்ணயம் செய்ய உள்ளனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக கவிஞர் வைரமுத்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், விரலில் வைத்த கருப்பு மை நகத்தை விட்டு வெளியேற சில வாரங்களாகும். பிழையான ஆட்களை தேர்ந்தெடுத்து விட்டால் அநீதி வெளியேற 5 ஆண்டுகள் ஆகும். 

இதனால் சரியான வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம் என வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vairamuthu appealed to voters


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->