ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் பேஸ்புக்கில் மோசடி.. போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் பவுண்டேஷன் அறக்கட்டளையின் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் ரஜினிகாந்த் பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறோம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து வருகிறோம்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் புகைப்படத்துடன் எங்கள் அறக்கட்டளை பெயரில் போலி பேஸ்புக் பக்கம் தொடங்கி பரிசு பொருட்கள் வழங்கப் போவதாக கூறி எங்கள் அறக்கட்டளை பெயரில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது ரஜினிகாந்த் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ரஜினிகாந்த் பவுண்டேஷன் அறக்கட்டளைக்கும் அவமதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth foundation scam in facebook


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->