ஐயோ பாவம்.! பிரபல கவர்ச்சி நடிகைகளான சன்னி லியோன், ஷில்பா ஷெட்டி ஆகியோருக்கு வந்த சிக்கல்.!! பல கவர்ச்சி நடிகைகளும் இதில் சிக்குகின்றனர்!!! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவில் பிரபலமானது பாலிவுட், இதில் பல்வேறு நடிகர், நடிகைகள் இருந்தாலும் சில நட்சத்திரங்களுக்கே மவுசு அதிகம், அதிலும் கவர்ச்சி என்றால் போதும் பாலிவுட் சினிமா ரசிகர்களுக்கு விருந்து சாப்பிடும் அளவுக்கு ரசிப்பார்கள். அதில் சன்னி லியோன், ஆர்த்தி சப்ரியா, சோனல் சவுஹான், கரிஷ்மா தன்னா போன்ற நடிகைகளின் போஸ்டர்களையே பார்த்து ரசிப்பார்கள்.

இந்த சூழ்நிலையில், ரூ.2000 கோடி பிட்காயின் மோசடி வழக்கில் நடிகைகள் சன்னி லியோன், ஷில்பா ஷெட்டி, ஹியூமா குரேசி உள்ளிட்ட ஏராளமான நடிகைகள் சிக்குகின்றனர்.

இந்தியாவில் பிட்காயின்களை வாங்குவதும், விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் அமித் பரத்வாஜ் பிட்காயின் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பிட்காயின்களை வாங்கினால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்று பிரபல நடிகைகள் விளம்பரம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, அமித் பரத்வாஜின் பிட்காயின் நிறுவன விளம்பரத்தில் நடிகைகள் சன்னி லியோன், பிராச்சி தேசாய், ஆர்த்தி சப்ரியா, சோனல் சவுஹான், கரிஷ்மா தன்னா, ஜரீன் கான், நேஹா தூபியா, ஹுயூமா குரேசி, நர்கிஷ் பக்ரி மற்றும் ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும்  2 ஆயிரம் கோடி ரூபாய் வரை இதனை நம்பி சுமார் 8 ஆயிரம் பேர் இந்தியா முழுவதிலும் இருந்து முதலீடு செய்தனர். 

இதனைத் தொடர்ந்து, இந்த முதலீட்டு பணத்துடன் தொழில் அதிபர் அமித் பரத்வாஜ் காணாமல் போனார். முதலீட்டாளர்கள் அளித்த புகார்களை தொடர்ந்து, புனேவில் அமித் பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.மேலும் இந்த பிட்காயின் மோசடி எப்படி நடைபெற்றது என்று அமலாக்கத்துறை விசாரணை நடத்திய போது தான் பிரபல நடிகைகள் அமித் பரத்வாஜிடம் கோடி கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு அவரது பிட்காயின் நிறுவனத்திற்காக விளம்பரம் செய்தது தெரிந்தது.

மேலும், பிரபல நடிகைகள் விளம்பரத்தில் நடித்த ஒரே காரணத்தினால் தான் பல பேர்  அமித் பரத்வாஜ் நிறுவனத்தில் கோடி கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில் விளம்பரங்களுக்கு ஏற்பாடு செய்த நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்ராவை அமலாக்கத்துறை விசரித்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விளம்பரத்தில் நடித்த சன்னி லியோன், ஹூயுமா குரேசி, ஷில்பா ஷெட்டி ஆகியோரையும் அமலாக்கத்துறை விசாரிக்க உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

problem for bollywood actress


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->