பிரபல தயாரிப்பாளர் காலமானார்.! அதிர்ச்சியில் திரையுலகம்..! - Seithipunal
Seithipunal


பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான நிக் ஆட்ர்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி (55) புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் நடிகர் அஜித்தின் சிட்டிசன், ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு ஆகிய பல படங்களைத் தயாரித்துள்ளார். மேலும் விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு, சிம்பு நடித்த காளை, வாலு ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.

இதையடுத்து, விமல் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த "விலங்கு" என்ற இணைய தொடரில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரின் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Popular producer Nick Arts SS Chakraborty passed away


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->