தெலுங்கில் ''மஞ்சும்மல் பாய்ஸ்'' ரிலீஸ் அப்டேட்! வைரலாகும் போஸ்டர்.!
Manjummal Boys Telugu release update
சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான திரைப்படம் ''மஞ்சும்மல் பாய்ஸ்''. இந்த திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் உலக அளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
மேலும் இந்தியா பாக்ஸ் ஆபீஸ் கலக்சன் மட்டும் ரூ. 110 கோடி வசூலித்துள்ளதாகவும் தமிழகத்தில் மட்டும் ரூ. 52 கோடி கோடி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி தெலுங்கு மொழியில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாக பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Manjummal Boys Telugu release update