வெளிநாட்டில் வெற்றிநடை போட தயாராகும் லியோ.! ரசிகர்கள் கொண்டாட்டம்.! - Seithipunal
Seithipunal


வெளிநாட்டில் வெற்றிநடை போட தயாராகும் லியோ.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில். நடிகர் விஜய் நடிப்பில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இந்தப்படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பல மடங்கு அதிகரிக்கச் செய்து வருகிறது.

இந்த நிலையில்,’லியோ’ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு முன்னதாக, இங்கிலாந்து நாட்டில் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டதுடன், ஒரே நாளில் 10000+ டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன.

அதனால், ’லியோ’ திரைப்படம் இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாக முன்பதிவுகளைத் தொடங்கிய முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலமான கூட்டணியால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இங்கிலாந்தில் இந்தியப் படமொன்றின் மிகப்பெரிய வெளியீடாக இப்படத்தை  உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் விநியோகம் செய்த ’வாரிசு’ திரைப்படத்தின்  முன்பதிவு ஆரம்பித்த முதல் 24 மணி நேரத்தில் சுமார் 2000 டிக்கெட்டுகளை விற்றது. அதை விட ’லியோ’ திரைப்படம் பன்மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

leo movie ticket sale in england


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->