'ரஜினி ஒரு சிறந்த தலைவர்' - வருந்தும் லதா ரஜினிகாந்த்! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் அரசியலுக்கு வர வேண்டும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் அதற்கு ஏற்ப திரைப்படங்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் அரசியல் சார்ந்து பேசி வந்தார். 

இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆன்மீக அரசியல் செய்வேன் என பேசிய ரஜினிகாந்த் கடந்த 2021 ஆம் ஆண்டு அரசியலில் ஈடுபடும் திட்டம் இல்லை என தெரிவித்து ரஜினி மக்கள் மன்ற அமைப்பை கலைத்தார். 

இந்நிலையில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினி அரசியலுக்கு வராதது ஏன் என்பது குறித்து பேசி உள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, 

''அவர் அரசியலுக்கு வராதது வருத்தம் தான். அவரை நான் ஒரு தலைவராக பார்த்தேன். ரஜினி சிறந்த தலைவர். அதனால் அது வருத்தமே. 

இருப்பினும் அதற்கான காரணமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இருந்தது. அதற்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Latha rajinikanth speech goes viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->