பிரபலத் தயாரிப்பாளர் முரளிதரன் காலமானார்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் திரைப்படத் தயாரிப்பாளரும்,  'லட்சுமி மூவி மேக்கர்ஸ்' நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவருமானவர் முரளிதரன். இவர் முன்னணி நடிகர்களான கமல் நடித்த அன்பே சிவம், விஜய் நடித்த பகவதி, சூர்யா நடித்த உன்னை நினைத்து, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களைத் தயாரித்துள்ளார்.

கடைசியாக இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சகலகலா வல்லவன் திரைப்படத்தை தயாரித்தார்.

அதன் பின்னர் திரையுலகில் இருந்து சில காலமாக ஒதுங்கி இருந்தார். தயாரிப்பாளர் சங்கத்திலும் பொறுப்பில் இருந்த அவர் சமீப காலமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், கும்பகோணத்தில் இருந்த தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பு காரணமாக தற்போது காலமாகியுள்ளார்.

இந்த செய்தி திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lakshmi movie makers leader muralitharan died


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->